Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சுங்க ஒன்றியம்: பிரித்தானியா தடைகளை எதிர்நோக்குமென எச்சரிக்கை

In
Updated: 05:01 GMT, Feb 6, 2018 | Published: 05:01 GMT, Feb 6, 2018 |
0 Comments
1170
This post was written by : Suganthini

ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றைச்சந்தை மற்றும் சுங்க ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறினால்;, வர்த்தக நடவடிக்கையில் தவிர்க்க முடியாத தடைகளை பிரித்தானியா எதிர்நோக்க நேரிடுமென, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரெக்சிற்றுக்கான பிரதான பேச்சாளர் மைக்கேல் பார்னியர் தெரிவித்துள்ளார்.

பிரெக்சிற் விவகாரம் தொடர்பாக, Downing Street அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) கலந்துரையாடல் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடலில், ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரெக்சிற்றுக்கான பிரதான பேச்சாளர் மைக்கேல் பார்னியர், பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே, பிரித்தானியாவின் பிரெக்சிற்றுக்குப் பொறுப்பான அமைச்சர் டேவிட் டேவிஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இந்தக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த மைக்கேல் பார்னியர், ‘ஐரோப்பிய ஒன்றியத்தின் சுங்க ஒன்றியம் மற்றும் ஒற்றைச் சந்தையிலிருந்து பிரித்தானியா வெளியேறினால், வர்த்தகம், பொருட்கள், சேவைகள் ஆகியவற்றில் தவிர்க்கமுடியாத தடைகளை அந்நாடு  எதிர்நோக்க நேரிடும்’ என்றார்.

மேலும், ‘ஐரோப்பிய ஒன்றியத்துடனான எதிர்கால உறவு தொடர்பாக பிரித்தானியா அதன் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டுமென்பதுடன், பிரெக்சிற்றுக்குப் பின்னர், பிரித்தானியாவுக்கு எவ்வகையான உறவு தேவையென்பதைத் தெரிந்துகொள்ளுவதற்கு அந்நாட்டுக்கு  நேரம் வந்துள்ளது’ எனவும் அவர் கூறியுள்ளார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த டேவிட் டேவிஸ், ‘பிரெக்சிற் தொடர்பாக, பிரித்தானியாவின் நிலைப்பாடு தெளிவாகவுள்ளது’ என்றார்.

‘சுங்க ஒன்றியத்திலிருந்து வெளியேறும் பிரித்தானியாவுக்கு, சிறந்த எதிர்காலம் தேவைப்படுகின்றது. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்துடன் இலவச வர்த்தக உடன்படிக்கையை மேற்கொள்ள பிரித்தானியா விரும்பியது. ஆனால், ஏனைய நாடுகளுடன் வர்த்தக உடன்படிக்கைளை மேற்கொள்வதற்கு அதிகளவான வாய்ப்புகள் கிடைக்கின்றன’ எனவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், ‘பிரெக்சிற்றுக்குப் பின்னர் இடைமாற்றுக்காலம் தொடர்பாக உடன்படிக்கையை பிரித்தானியா எட்டுமென்பதில் நாம் உறுதியாகவுள்ளோம்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg