Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒலிம்பிக்போட்டி: சமாதானத் தகவல் வெளியிட கொரியாக்களுக்குச் சந்தர்ப்பம்

In உலகம்
Updated: 05:48 GMT, Feb 6, 2018 | Published: 05:43 GMT, Feb 6, 2018 |
0 Comments
1274
This post was written by : Suganthini

குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப நிகழ்வில், ஒரு கொடியின் கீழ் இரு கொரியாக்களும் அணிவகுத்துச் செல்வதன் மூலம், சமாதானத் தகவலை வெளியிட முடியுமென, சர்வதேச ஒலிம்பிக் குழுவின் தலைவர் தோமஸ் பச் தெரிவித்துள்ளார்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடர்பாக தென்கொரியாவில் நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே, அவர் இதனைக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப நிகழ்வில், ஒரே கொடியின் கீழ் இரு கொரியாக்களும் அணிவகுத்துச் செல்வுள்ளன. இச்சூழ்நிலையில், மிகவும் சக்திவாய்ந்த சமாதானத்துக்குரிய தகவலை வடகொரியாவும் தென்கொரியாவும் உலகத்துக்கு வெளியிட முடியும்’ என்றார்.

‘வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுதச் சோதனைகள் காரணமாக இரு கொரியாக்களுக்கிடையில்  காணப்பட்ட முறுகல் நிலைமை, ஒலிம்பிக் போட்டிக்கான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து தற்போது  சற்றுத் தணிந்துள்ளது. எனவே, இரு கொரியாக்களுக்கிடையிலும் பேச்சுவார்த்தை நடைபெற ஒலிம்பிக் போட்டி மூலம் வாய்ப்புக் கிடைத்தாலும், செயன்முறை மிக முக்கியமானது’ எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, அமெரிக்காவின் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் மற்றும் அவரது பாரியார் கரேன் ஆகியோர் தென்கொரியாவை நேற்று சென்றடைந்துள்ளனர்.

அத்துடன், தென்கொரியாவில் எதிர்வரும் 9ஆம் திகதி முதல்; 25ஆம் திகதிவரை நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியைக் கண்டுகளிப்பதற்காக பெருமளவான சுற்றுலாப் பயணிகள் தென்கொரியாவுக்கு வருகை தருவதாகவும், சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg