Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆட்சிச் சிக்கலில் தென்னாபிரிக்க ஜனாதிபதி ஷுமா: ஏ.என்.சியின் உயர்மட்டக் கூட்டம்

In
Published: 06:33 GMT, Feb 6, 2018 |
0 Comments
1093
This post was written by : Suganthini
south

தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜகோப் ஷுமா ஆட்சிச் சிக்கலை எதிர்நோக்கியுள்ள நிலையில், தென்னாபிரிக்காவின் ஆளும் கட்சியான ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் உயர்மட்டக் கூட்டத்தை நாளை (புதன்கிழமை) நடத்தவுள்ளது.

ஜனாதிபதி ஷுமா மற்றும் துணை ஜனாதிபதியும் ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் தலைவருமான சிரில் ரமபோசா ஆகியோருக்கிடையிலான நிர்வாக மாற்றம் தொடர்பாக நாளைய கூட்டத்தில் கலந்துரையாடவுள்ளதாக, ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸ் (ஏ.என்.சி.) தெரிவித்துள்ளது.

தென்னாபிரிக்காவின் ஜனாதிபதியாக கடந்த 2009ஆம் ஆண்டிலிருந்து ஆட்சி வகித்துவரும் 75 வயதான ஷுமா, ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ளார்.

இந்நிலையில், ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸின் தலைவர் பதவியிலிருந்து கடந்த டிசெம்பரில் ஜனாதிபதி ஷுமா நீக்கப்பட்டதுடன், அக்கட்சிக்கு புதிய தலைவராக துணை ஜனாதிபதி சிரில் ரமபோசா நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து, ஜனாதிபதி ஷுமாவை பதவியிலிருந்து விலக்குவதற்கான அழுத்தம், ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸில் அதிகரிகத்துக் காணப்படுகின்றது. இருப்பினும், பதவியிலிருந்து விலக ஜனாதிபதி ஷுமா மறுத்துள்ளார்.

மேலும், தென்னாபிரிக்காவின் தலைநகர் ஜோகன்னஸ்பேர்க்கில் நேற்று நடைபெற்ற ஆபிரிக்கத் தேசிய காங்கிரஸின் கூட்டத்தில், ஜனாதிபதி ஷுமாவை பதவியிலிருந்து விலக்குவது தொடர்பாகக் கலந்துரையாடப்படவில்லையென, கட்சிப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg