Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரித்தானிய சுகாதாரச் சேவை: ட்ரம்ப் விமர்சனம்

In
Updated: 07:17 GMT, Feb 6, 2018 | Published: 07:17 GMT, Feb 6, 2018 |
0 Comments
1085
This post was written by : Suganthini

பிரித்தானியாவின் தேசிய சுகாதாரச் சேவை தொடர்பாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று (திங்கட்கிழமை) வெளியிட்ட தனது டுவீட்டர் செய்தியிலேயே, அவர் விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

டுவீட்டர் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘பிரித்தானியாவில் தேசிய சுகாதார சேவை செயலிழந்து வருவதால், ஆயிரக்கணக்கான மக்கள் பேரணியில் ஈடுபட்டனர். எனவே, உலகளாவிய சுகாதாரத் திட்டத்துக்கு அமெரிக்க ஜனநாயகக் கட்சியினர் அழைப்பு விடுக்கின்றனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவின் தேசிய சுகாதார சேவை, கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், சுகாதாரச் சேவையை பாதுகாக்கக் கோரி பிரித்தானியாவில் பேரணியொன்று நடத்தப்பட்டது.

11 நாடுகளின் சுகாதாரச் சேவையுடன் ஒப்பிடுகையில், பிரித்தானியாவின் சுகாதார சேவையானது பாதுகாப்பு, செயற்றிறன் உள்ளிட்டவை தொடர்பாக நன்மதிப்புப் பெற்றுள்ளதுடன், பிரித்தானியாவின் சுகாதாரச் சேவை தொடர்பாக, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே பெருமை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg