Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேல்ஸில் சட்டமன்றத் தேர்தல்

In
Updated: 07:43 GMT, Feb 6, 2018 | Published: 07:43 GMT, Feb 6, 2018 |
0 Comments
1160
This post was written by : Suganthini

வேல்ஸில்  தேசிய சட்டமன்றத் தேர்தல் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை ஆரம்பமாகியுள்ள நிலையில், வாக்களிப்புகள் நடைபெற்று வருகின்றன.

வேல்ஸ் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தொழிற்கட்சியின் முன்னாள் அமைச்சர் கார்ல் சார்ஜன்ட (Carl Sargeant ), கடந்த நொவம்பரில் காலமானார். இவரது வெற்றிடத்துக்கு புதிய உறுப்பினரைத் தெரிவுசெய்யும் நோக்கில் தேர்தல் நடத்தப்படுகின்றது.

இந்தத் தேர்தலில் கொன்சர்வேட்டிவ் கட்சி, தொழிற்கட்சி, லிபரல் ஜனநாயகக் கட்சி, கிறீன் கட்சி, சமூக ஜனநாயகக் கட்சி ஆகியவற்றைப் பிரதிநிதித்துவப்படுத்தி 5 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

தேர்தல் வாக்களிப்பு இன்று மாலையுடன் நிறைவடையுமென்பதுடன், தேர்தல் முடிவுகள் நாளை (புதன்கிழமை) காலை வெளியாகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2016ஆம் ஆண்டு வேல்ஸில்  சட்டமன்றத் தேர்தல் கடைசியாக நடைபெற்றதுடன், இதில் தொழிற்கட்சி பெரும்பான்மையைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg