Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மலையக மக்கள் சுயமாக வாக்களிக்க வேண்டும்: ஈரோஸ் ஜனநாயக முன்னணி

In இலங்கை
Updated: 08:34 GMT, Feb 6, 2018 | Published: 08:34 GMT, Feb 6, 2018 |
0 Comments
1131
This post was written by : Risha

தம் மீதான கரைகளை போக்க மலையக மக்கள் சுயமாக வாக்களிக்க முன்வர வேண்டும் என ஈரோஸ் ஜனநாயக முன்னணி வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஹட்டனில் நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் முன்னணியின் மலையக பிராந்திய பொறுப்பாளரும், நிறைவேற்றுக்குழு உறுப்பினருமான இரா.ஜீவன் ராஜேந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், “பிரதேச சபைகளின் ஊடாக பெருந்தோட்ட தொழிலாளர் மக்கள் பெற்றுக்கொள்ள கூடிய அனைத்து உரிமைகளும் முழுமையாக சென்றடைய வேண்டும், பெருந்தோட்ட மக்கள் ஓரங்கட்டப்படாமல் சட்டப்படி நில உரிமையாளர்களாக மாற்றம் பெற வேண்டும் ஆகிய கொள்கைகளை முன்வைத்து, இத்தேர்தலில் காலடி எடுத்துவைத்துள்ளோம்.

இது தொடர்பாக அரசாங்கம் உள்ளிட்ட மலையகத்தின் தலைமைத்துவ அமைச்சர்கள் அனைவருக்கும் வழிநடத்த கூடிய வழிவகைகளை நாம் எடுத்துரைத்துள்ளோம். இந்த தேர்தலில் அரசாங்கம் மாற்றம் ஒன்று வரபோவதில்லை. சமூதாயத்திற்கு சேவை செய்யக்கூடிய பிரதிநிதிகளை வட்டார ரீதியில் தேர்ந்தெடுப்பதற்கு உள்ள தேர்தலாக அமைகின்றது.

ஆனாலும், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களை பொருத்தவரையில் பிழையான ஒரு பார்வை பார்க்கப்படுகின்றது. பணம், பலம், குண்டர்கள் நடவடிக்கை, உணவு, மதுபானம் போன்றவற்றை வாக்களர்களுக்கு வழங்கினால் வாக்குகள் கிடைத்துவிடும் என்ற முட்டாள் தனமான பிழையான கருத்து மலையக மக்கள் மீது கரையாக படிந்துள்ளது.

இவை அனைத்தையும் தகர்த்தெரிந்து சுயமாக வாக்களிக்க மக்கள் முன்வர வேண்டும். அதன்போது அந்த பிழையான கரை மாற்றம் பெறும்” எனக் குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg