Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

நாடாளுமன்றில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு!

In இந்தியா
Updated: 11:15 GMT, Feb 6, 2018 | Published: 11:13 GMT, Feb 6, 2018 |
0 Comments
1116
This post was written by : Litharsan

மாநிலங்களவையில் இருந்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளிநடப்புச் செய்துள்ளனர்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவரும் நிலையில் இதுவரை நடைபெற்ற இரு அவைகளிலும் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் நாடாளுமன்றம் கூடியபோது மாநிலங்களவையில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ், அகாலி தளம் மற்றும் தெலுங்கு தேசம் உள்ளிட்ட கட்சிகள் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வந்து பல்வேறு பிரச்சினைகளை முன்வைக்க முனைந்தனர். ஆனால் அந்த தீர்மானங்களை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு நிராகரித்தார்.

அதனால் அதிருப்தி அடைந்த குறித்த கட்சிகளின் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்து நாடாளுமன்றில் குழப்பத்தை ஏற்படுத்தினர். இதன் காரணமாக மதியம் 2 மணி வரை மாநிலங்களவையை அவைத்தலைவர் ஒத்திவைத்தார்.

எனினும் 2 மணியளவில் மீண்டும் அவை கூடியபோதும் அவர்கள் கோரிக்கையை முன்வைத்தனர். ஆனால் கோரிக்கை மறுக்கப்பட்டது. இதனால் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg