Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஷ்யாவில் ஜனதிபதித் தேர்தல்: வேட்பாளராக புட்டின் பதிவு

In
Updated: 11:18 GMT, Feb 6, 2018 | Published: 11:18 GMT, Feb 6, 2018 |
0 Comments
1107
This post was written by : Suganthini

ரஷ்யாவில் எதிர்வரும் மார்ச் 18ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராக விளாடிமிர் புட்டினை, ரஷ்ய மத்திய தேர்தல்கள் ஆணையகம் இன்று (செவ்வாய்க்கிழமை) பதிவு செய்துள்ளது.

ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராகப் பதிவு செய்வதற்கு சுமார் 3 லட்சம் கையெழுத்துகள் தேவைப்படும் பட்சத்தில், தனது ஆதரவாளர்களிடமிருந்து 3 லட்சத்து 14 ஆயிரத்து 837 கையெழுத்துகளை புட்டின் தலைமையகம் பெற்றுள்ளது. இந்நிலையில், அவரை ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளராகப் பதிவு செய்துள்ளதாக, தேர்தல்கள் ஆணையகம் கூறியுள்ளது.

இதேவேளை, 3 லட்சத்து 14 ஆயிரத்து 837 கையெழுத்துகளில் 232 கையெழுத்துகள் செல்லுபடியாகாதவையெனவும், தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது.

மேலும், தேர்தல் வேட்பாளர்களைத் பதிவு செய்யும் நடவடிக்கை, எதிர்வரும் 10ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாகவும், தேர்தல்கள் ஆணையகம் கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg