Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாவீரரினதும் மக்களினதும் தீர்வுக்காக உதய சூரியனுக்கு வாக்களியுங்கள் -துஷ்யந்தன்

In இலங்கை
Updated: 12:23 GMT, Feb 6, 2018 | Published: 12:23 GMT, Feb 6, 2018 |
0 Comments
1212
This post was written by : poovannan

மாவீரர்களினதும் மக்களினதும் தியாகத்திற்கு ஈடான தீர்வை பெறுவதற்காக உதய சூரியனுக்கு வாக்களியுங்கள் என ஈழவர் ஜனநாயக கட்சியின் தலைவர் துஷ்யந்தன் தெரிவித்தார்.

வவுனியா வடக்கு பிரதேச சபைக்கான தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளரை ஆதரித்து, இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் அவர் கருத்து கூறுகையில், “தீர்வுகள் கிடைக்கும் என்றும் வடக்கு கிழக்கில் பாரிய அபிவிருத்திகள் இடம்பெறும் என்றும் எதிர்பார்த்த எமக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பால் எதுவுமே கிடைக்கவில்லை.

இதன் காரணமாகவே சிவசக்தி ஆனந்தன் தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பை உருவாக்கியுள்ளார். இக்கட்சி வடக்கு கிழக்கில் ஈட்டும் பாரிய வெற்றியானது எமது தேசத்தின் மக்களினது தியாகத்திற்கு ஈடான தீர்வை பெற்றுத் தரும்.

கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்களுக்காக எதனையும் செய்யாமையினால் இம்முறை பாரிய பரப்புரைகளை மேற்கொள்ளவேண்டிய தேவை அக்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது.

2004ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் சுட்டிக் காட்டியது உதய சூரியன் சின்னம் என்பதால் அனைத்து மக்களும் ஒன்று திரண்ட உதய சூரியன் சின்னத்திற்கே வாக்களித்திருந்தனர்.

எனவே எமது மக்கள் எதிர்காலத்தில் அபிவிருத்திகளைப் பெறுவதற்கும் அரசியல் தீர்வு நோக்கிய பயணத்திற்கும் உதய சூரியன் சின்னத்தினை ஆதரியுங்கள்” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg