Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இத்தாலியில் குடியேற்றவாசிகள் நாடு கடத்தப்படும் அபாயம்!

In
Updated: 12:09 GMT, Feb 6, 2018 | Published: 12:06 GMT, Feb 6, 2018 |
0 Comments
1150
This post was written by : Suganthini

இத்தாலியில் எதிர்வரும் மார்ச் 4ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலில், மைய வலதுசாரிக் கூட்டணி வெற்றி பெற்றால், சுமார் 6 லட்சம் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளை நாடு கடத்த நடவடிக்கை எடுக்கப்படுமென, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி (SILVIO Berlusconi) உறுதியளித்துள்ளார்.

இத்தாலியிலுள்ள தொலைக்காட்சிச் சேவையொன்றுக்கு நேற்று (திங்கட்கிழமை) வழங்கிய நேர்காணலின்போதே, அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.

சட்டவிரோதக் குடியேற்றவாசிகள் தொடர்பாக கருத்து வெளியிட்ட அவர், ‘இத்தாலியில் சட்டவிரோதக் குடியேற்றவாசிகளின் வருகை பாரிய சமூகப் பிரச்சினையாகக் காணப்படுகின்றது.

அத்துடன், இத்தாலியில் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களின் சுமையை பகிர்ந்துகொள்ளும் வகையில், ஐரோப்பிய ஒன்றியம் பரந்த குடியேற்றக் கொள்கையை ஏற்றுக்கொள்ளத் தவறியுள்ளது.

எனவே, எதிர்வரும் தேர்தலில் மைய வலதுசாரிக் கட்சி வெற்றி பெறும் பட்சத்தில், 6 லட்சம் குடியேற்றவாசிகளை நாடு கடத்த எண்ணியுள்ளோம்’ என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg