Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரஜினியையே தோற்கடிக்கும் வல்லமை கொண்டவர் மைத்திரி: ஜே.வி.பி.

In இலங்கை
Updated: 12:28 GMT, Feb 6, 2018 | Published: 12:28 GMT, Feb 6, 2018 |
0 Comments
1190
This post was written by : Risha

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மற்றும் பிரதமர் ரணில் விக்கிரசிங்க ஆகியோரின் நடிப்பை கண்டு சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் ஆகியோர் அஞ்சி வருகின்றனர் என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் ரத்னாயக்க தெரிவித்தார்.

கிளிநொச்சியில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”இலங்கையின் பிரதான கட்சிகள் இண்டும் தங்களை ஊழல் கட்சிகள் என நிரூபித்துக் கொண்டுள்ளன. வடமாகாண மக்களுக்கான வீடமைப்புக்காக இந்தியா தலா ஒரு வீட்டிற்கு 5 அரை லட்சம் வழங்கி வருகிறது.

அந்தவகையில், பிணைமுறி மோசடியின் மூலமான பணத்தை கொண்டு வடக்கில் 22 ஆயிரம் வீடுகளை கட்டியிருக்கலாம். அதேவேளை, ஜனாதிபதி மைத்திரியும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் இணைந்து ஆட்சி செய்த போது நடந்த ஊழல்களை கொண்டு 40 ஆயிரம் வீடுகளை கட்டியிருக்கலாம்.

ஜனாதிபதியும், பிரதமரும் இன்று சிறந்த நடிகர்களாக விளங்கிவருகின்றனர். இவர்களை கண்டு தென்னிந்தியாவின் பிரபல நடிகர்களான ரஜினிகாந்த், ஷாருக்கான், விஜய் ஆகியோர் அஞ்சுகின்றனர்.

இவர்கள் இருவரும் இணைந்து திருடர்களை பிடிப்பதாக நாடகமாடி வருகின்றனர். பிணைமுறி மோசடி குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவில் மோசடிக்காரராக பெயரிடப்பட்டுள்ள நிலையில், சிறையிலடைக்கப்பட வேண்டியவர்களுக்கு இந்த அரசாங்கம் உயர் பதவிகளை வழங்கி வருகிறது” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg