Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மும்பை பங்குச் சந்தை தொடர் வீழ்ச்சி – 5இலட்சம் கோடி ரூபாய் இழப்பு!

In வணிகம்
Updated: 12:46 GMT, Feb 6, 2018 | Published: 12:46 GMT, Feb 6, 2018 |
0 Comments
1117
This post was written by : Litharsan

மும்பை பங்குச் சந்தை இன்று (செவ்வாய்க்கிழமை) பெரும் சரிவுடனேயே ஆரம்பித்தமையால் பங்கு வியாபாரிகளுக்கு 5 இலட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

இன்றைய வர்த்தக தொடக்கத்தில் மும்பை பங்குச்சந்தை 1,128 புள்ளிகள் சரிந்து 33,628 புள்ளிகளாக உள்ளதுடன் தேசிய பங்குச்சந்தை 360 புள்ளிகள் சரிந்து 10,306 புள்ளிகளாக உள்ளது.

அமெரிக்க பங்குச் சந்தை வீழ்ச்சியடைந்த நிலையில் சர்வதேச சந்தையில் நிலையற்ற தன்மை நிலவுகின்றது. இதனால் முதலீட்டாளர்கள் அச்சமடைந்து பங்குகளை விற்பனை செய்து வருவதாலேயே இந்த வீழ்ச்சி ஏற்பட்டது.

இதனைவிட அண்மையில் பட்ஜெட் தாக்கல் செய்யும்போது, பங்குகளில் நீண்டகால முதலீடு செய்பவர்களுக்கு வரிவிதிப்பு கொண்டுவரப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்புக்கு பின் சரிவடைந்த மும்பை பங்குச்சந்தை இன்னும் மீளாத நிலையிலேயே உள்ளது.

கடன் வாங்கும் போது ஏற்படும் வட்டிவீதத்தை அமெரிக்க அரசு உயர்த்தப் போவதாக எழுந்த அறிவிப்பையடுத்து, அமெரிக்க வோல் ஸ்ரீட் பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அவுஸ்ரேலியா, ஹொங்கொங், சிங்கப்பூர், சியோல், தைஃபே, ஷாங்காய் ஆகிய நாடுகளின் பங்குச்சந்தைகளும் மற்றும் ஆசியப் பங்குச்சந்தைகளும் சரிவிலிருந்து மீளவில்லை. அந்த வகையிலெயே இந்திய பங்குச் சந்தையிலும் பெரும் வீழ்ச்சி ஏற்றபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg