Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உண்மைகளை கூற முடியாதவர்களே துண்டுப் பிரசுரங்களை வெளியிடுகின்றனர் -சந்திரகுமார்

In இலங்கை
Updated: 13:28 GMT, Feb 6, 2018 | Published: 13:24 GMT, Feb 6, 2018 |
0 Comments
1181
This post was written by : poovannan

ஜனநாயக வழியில் விமர்சனங்களை முன்வைக்க முடியாத கிளிநொச்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் அவதூறுகளை துண்டுப் பிரசுரங்களில் வெளியிட்டு வருகின்றனர் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி – பரந்தன் பொதுச்சந்தையில் சுயேட்சைக் குழுவில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை ஆதரித்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், “கருத்துக்களை கருத்துளால் வெல்ல முடியாதவர்களின் செயற்பாடாகவே இத்துண்டுப் பிரசுரங்களை பார்க்கின்றேன். கிளிநொச்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் என் மீதான குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் பகிரங்க விவாததிற்கு வர முடியுமா?

ஒரு ஜனநாயக நாட்டில் மாற்றுக் கருத்துக்களை கொண்ட அரசியல் தரப்புக்களை இன்னொரு தரப்பு விமர்சனம் செய்வது வழமையானது. ஆனால் அந்த விமர்சனங்கள் உண்மையானதாக இருக்க வேண்டும். மக்கள் தங்களின் பிரதிநிதிகளாக தெரிவு செய்ய உள்ளவர்கள் உண்மையானவர்களாக, நேர்மையானவர்களாக ஊழலற்றவர்களாக வினைத்திறன் மிக்கவர்களாக இருப்பதை ஆராய்ந்து வாக்களிக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

ஓய்வு பெற்ற கரைச்சி பிரதேச சபையின் செயலாளர் மோ. அருட்சோதி தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் வேட்பாளர்களான சு. மனோகரன், ஞானகலா, தவநாயகி, இராமச்சந்திரன், பேரம்பலம் ஆகியோரும் பொது மக்களும் கலந்துகொண்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg