Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தாய்வான் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் 4ஆக உயர்வு: சுமார் 225 பேர் படுகாயம்

In
Published: 02:36 GMT, Feb 7, 2018 |
0 Comments
1125
This post was written by : Anojkiyan
earth

தாய்வானில் ஏற்பட்டுள்ள சக்திவாய்ந்த நிலநடுக்கம் காரணமாக, நால்வர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 225 பேர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள கட்டட இடிபாடுகளில் சிக்கி 150க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தாய்வானின் சுற்றுலா நகரான ஹுவலியன் (Hualien) நகரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதுடன், இது ரிக்டர் அளவுகோலில் 6.4ஆக பதிவாகியுள்ளது.

இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதாகவும், மீட்புப் பணியாளர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், உயிரிழப்புகள் அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை, நிலநடுக்கம் ஏற்பட்ட இடத்துக்கு இன்று (புதன்கிழமை) காலை  சென்று அங்குள்ள நிலைமையை அவதானித்த ஜனாதிபதி Tsai Ing-wen, உடனடியாக அனர்த்த நிவாரண நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உரிய அதிகாரிகளுக்குப் பணித்துள்ளார்.

தாய்வானில் கடந்த 1999ஆம் ஆண்டு 7.6 ரிக்டர் அளவுகோலில் ஏற்பட்டிருந்த நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 2 ஆயிரத்து 400 பேர் உயிரிழந்திருந்ததுடன், இதனையடுத்து, கடந்த 2006ஆம் ஆண்டு ஏற்பட்டிருந்த நிலநடுக்கத்தில் சிக்கி சுமார் 100 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: இரண்டு பேர் உயிரிழப்பு

தாய்வானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதோடு 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் நேரப்படி நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 11.50 மணியளவில், தாய்வானின் கிழக்குக் கரைக்கு அப்பால் 20கி.மீ தூரத்தில் 6.4ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான சுமார் 100,000 மக்கள் வாழும் ஹொவாலியன் நகரில், பாதியளவில் சேதமடைந்த விடுதிகளிலிருந்தும், குடியிருப்பு கட்டடங்களிலிருந்தும் 150 பேரை அவசரகால பணியாளர்கள் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேதமடைந்த கட்டடங்களில் மருத்துவமனை ஒன்று மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், நிலநடுக்கத்தில், 10 அடுக்கு மாடி கொண்ட மார்ஷல் விடுதியும் சேதமடைந்துள்ளது.

இதுதவிர, சுமார் 40,000 வீடுகளில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நெடுஞ்சாலை மற்றும் பாலங்கள் மூடப்பட்டுள்ளன. நகரில் உள்ள அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகள் வரும் புதன்கிழமை வரை மூடப்பட்டுள்ளன. அவசர உதவிகளுக்கு இராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன் கடந்த 2016ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சுமார் 117 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)