Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சம்பந்தன் வேண்டாம் என்றால் மாற்றுத் தலைவர் யார்?- அரியநேத்திரன்

In
Updated: 04:29 GMT, Feb 7, 2018 | Published: 04:29 GMT, Feb 7, 2018 |
0 Comments
1128
This post was written by : Risha

தமிழ் தேசிய கூட்டமைப்பை தோற்கடிக்க வேண்டும் சம்பந்தனை தோற்கடிக்க வேண்டும், மாற்றுத்தலைமை வேண்டும் என கூறுபவர்கள் யாரை தலைவராக்கப் போகின்றீர்கள் என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

அம்பாறை பெரியநீலாவணை கிராமத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பரப்புரை கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”தமிழ்த் தேசிய கூட்டமைப்பையும், சம்பந்தனையும் தோற்கடிக்க வேண்டும் என கூறுபவர்களிடம் யாரை தலைவராக்கப் போகின்றீர்கள் என்றால் அவர்களிடம் எந்த பதிலும் இல்லை.

இடைக்கால அறிக்கையை தோற்கடிக்க வேண்டும் என கூறுகிறார்கள.; சரி அப்படியாயின் உங்களிடம் என்ன அரசியல் தீர்வுத்திட்டம் உள்ளது என்றால் எதுவுமே இல்லை வெறும் வாய் வீச்சு மட்டுமே.

ஆயுதப்போர் மௌனித்தால் அடுத்தகட்ட அரசியலை நகர்த்தக்கூடிய அமைப்பு ஒன்றுதேவை என்பதை உணர்ந்துதான் 2001ஆம் ஆண்டு பல தமிழ் கட்சிகளை ஒன்றிணைத்து இந்த தமிழ் தேசியகூட்டமைப்பு உருவானது. அன்று இருந்து இன்றுவரையும் தமிழ்மக்கள் ஜனநாயக ரீதியாக பல தேர்தல்களில் வாக்குப்பலத்தால் கூட்டமைப்பு பலப்படுத்தப்பட்டதால் தற்போது சர்வதேசம் அங்கீகரித்த கட்சியாக தமிழ் தேசிய கூட்டமைப்பு உள்ளது” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg