Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘இலங்கை ஒரே நாடு’ என்று இனியும் காலத்தை வீணடிக்க மாட்டோம்: ஸ்ரீகாந்தா

In இலங்கை
Updated: 05:20 GMT, Feb 7, 2018 | Published: 05:20 GMT, Feb 7, 2018 |
0 Comments
1207
This post was written by : Risha

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் அரசியல் தீர்வு கிட்டாவிடின், அதன் பின்னர் ‘இலங்கை ஒரே நாடு’ என்று கூறி காலத்தை வீணடிக்க மாட்டோம் என தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளரும், சிரேஷ்ட சடடத்தரணியுமாகிய என்.சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.

நல்லூரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”தமிழர்களுக்கான அரசியல் தீர்வு விடயம் உலக நாடுகள் மன்றமான ஐக்கிய நாடுகள் மன்றத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.

அடக்கி ஒடுக்கப்பட்ட கிழக்கு தீமோர் மக்களுக்கு ஐக்கிய நாடுகள் மன்றம், சர்வதேச சட்டத்தின் கீழ், சுய நிர்ணய உரிமையின் கீழ், சுதந்திர வாக்கெடுப்பை நடத்தி சுதந்திர நாடாக அறிவிக்கப்பட்டது.

அதற்கமைய, எங்கள் தாயகம், தமிழர் தேசம் தன்னுடைய தலைவிதியை தேர்ந்தெடுக்கும் உரிமையும், சந்தர்ப்பமும் வழங்கப்பட வேண்டும் என ஐ.நா.வை வலியுறுத்தவுள்ளோம்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg