Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாலைதீவு நெருக்கடி: 9 அரசியல் தலைவர்களின் விடுதலை உத்தரவு வாபஸ்

In உலகம்
Updated: 04:39 GMT, Feb 7, 2018 | Published: 04:39 GMT, Feb 7, 2018 |
0 Comments
1228
This post was written by : Suganthini

தற்போது மாலைதீவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், சிறையிலுள்ள 9 அரசியல் தலைவர்களையும் விடுதலை செய்யுமாறு உச்ச நீதிமன்றம் விடுத்த உத்தரவை மீளப்பெற்றுள்ளது.

மாலைதீவின் பிரதம நீதியரசர் அப்துல்லா சையீட் மற்றும் நீதிபதி அலி ஹமீட் ஆகியோர் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை மீளப் பெற்றுள்ளது.

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள 3 நீதிபதிகள், 9 அரசியல் தலைவர்களையும் விடுதலை செய்யுமாறு ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தினால் விடுக்கப்பட்ட உத்தரவை மீளப் பெற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளனர்.

பயங்கரவாதக் குற்றச்சாட்டின் பேரில், கடந்த 2015ஆம் ஆண்டு 13 ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல்லா நஷீட்டை பயங்கரவாதக் குற்றச்சாட்டிலிருந்து மாலைதீவு உச்ச நீதிமன்றம் விடுவித்திருந்ததுடன், சிறையில் அடைக்கப்பட்டுள்ள 9 அரசியல் தலைவர்களையும் விடுதலை செய்யுமாறு கடந்த 2ஆம் திகதி உத்தரவிட்டது.

இருப்பினும், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மாலைதீவு அரசாங்கம் மதித்து நடக்காத நிலையில், அங்கு அரசியல் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மவுமூன் அப்துல்லா கையூம் நேற்றுமுன்தினம் கைதுசெய்யப்பட்டதுடன், இதனையடுத்து, அந்நாட்டுப் பிரதம நீதியரசரும், நீதிபதியொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துன், 15 நாட்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தியுள்ளது. இந்தச் சூழ்நிலையில், மாலைதீவில் நிலவும் அரசியல் பதற்றத்தை தணிக்க முன்வருமாறு இந்தியாவிடம், முன்னாள் ஜனாதிபதி நஷீட் உதவி கோரியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg