Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்தோனேஷியாவில் அடை மழை: 6,500 பேர் இடம்பெயர்வு

In உலகம்
Updated: 05:06 GMT, Feb 7, 2018 | Published: 05:06 GMT, Feb 7, 2018 |
0 Comments
1214
This post was written by : Suganthini

இந்தோனேஷியாவில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் அடை மழை காரணமாக, 6 ஆயிரத்து 500 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக, அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேஷியாவில்  கடந்த சில நாட்களாக தொடர்ந்து அடை மழை பெய்துவரும் நிலையில், போகோர் (Bogor) நகரில் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதுடன், அந்நகரில் நேற்றுமுன்தினம்  மண்சரிவு ஏற்பட்டது.

இந்த மண்சரிவைத் தொடர்ந்து, 8 பேர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸார் கூறியுள்ளனர்.

அத்துடன், போகோர் நகரைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கை, அடை மழை காரணமாக முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg