Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

முத்தரப்பு ரி-ருவென்ரி- அவுஸ்ரேலியா, இங்கிலாந்து இன்று மோதல்

In கிாிக்கட்
Updated: 06:26 GMT, Feb 7, 2018 | Published: 06:24 GMT, Feb 7, 2018 |
0 Comments
1107
This post was written by : Elakkiya

அவுஸ்ரேலியா, நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்றுவரும் முத்தரப்பு ருவென்ரி- ருவென்ரி தொடரின் இரண்டாவது போட்டி இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.

ஹோபார்ட்டில் நடைபெறும் இந்த போட்டியில் அவுஸ்ரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன.

இன்றைய போட்டிக்கான இங்கிலாந்து அணியில்  அலெக்ஸ் ஹேல்ஸ், ஜேசன் ரோய், மற்றும் கிறிஸ் ஜோர்தன் ஆகியோர் காயத்திற்கு பின்னர் உடற்தகுதி உடையவர்களாக உள்ளனர். எனவே அணிக்கு பலம் சேர்ப்பர் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை அவுஸ்ரேலிய அணியை பொறுத்த வரையில், கடந்த சனிக்கிழமை நியூஸிலாந்து அணியுடன் நடைபெற்ற போட்டியில் பங்கேற்ற வீரர்களே இன்றைய போட்டியிலும் அணியில் உள்வாங்கப்பட்டுள்ளனர் என்று கூறப்படுகின்றது.

முன்னதாக அவுஸ்ரேலியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெற்ற முதலாவது போட்டியில் 7 விக்கெட்களால் அவுஸ்ரேலியா வெற்றிபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg