Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாற்று கட்சியினருக்கு கூட்டம் சேர வேண்டும் எனது பெயரை உச்சரிக்க வேண்டும்: ஆறுமுகன்

In இலங்கை
Updated: 06:08 GMT, Feb 7, 2018 | Published: 06:08 GMT, Feb 7, 2018 |
0 Comments
1208
This post was written by : Anojkiyan

மாற்று கட்சியினருக்கு கூட்டம் சேர வேண்டும் எனது பெயரை உச்சரித்தாக வேண்டும் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

பூண்டுலோயா நகரில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“மாற்று கட்சியினருக்கு கூட்டம் சேர வேண்டும் என்றால் எனது பெயரையும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பெயரையும் அவர்கள் உச்சரித்தே ஆக வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு கூட்டம் சேரும். காரணம் எனது பெயரை உச்சரித்து சொல்லப்படும் வார்த்தைகளுக்கே அந்த கூட்டம் வரும்.

நமது ஸ்தாபனம் மற்றும் எனது பெயர் நான் பரப்புவதை விட மாற்று கட்சியினர் தினமும் மக்கள் மத்தியில் பரப்பி வருகின்றனர். எதிர்காலத்தில் எனது பெயரை பச்சையும் குத்திக்கொள்வார்கள்.

சிலர் எமது ஸ்தாபன பாடசாலையில் அரசியல் கற்றவர்கள். வளர்த்த கடா மார்பில் பாய்வது போல் நமது ஸ்தாபனத்திற்கு எதிராக நடவடிக்கைகளை முன்னெடுக்க வந்தவர்கள் அடிப்பட்டு சென்று விட்டார்கள். இன்று அவர்கள் சென்ற இடத்திலும் அடிப்பட்டே வாழ்கின்றனர்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg