Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரான்ஸில் கடுமையான பனிப்பொழிவு

In
Updated: 06:06 GMT, Feb 7, 2018 | Published: 06:06 GMT, Feb 7, 2018 |
0 Comments
1144
This post was written by : Suganthini

பிரான்ஸின் தலைநகர் பரிஸில் கடுமையான பனிப்பொழிவுடன் குளிரான காலநிலை காணப்படுவதாக, அந்நாட்டு வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.

பரிஸில் இன்றுவரை (புதன்கிழமை) கடுமையான பனிப்பொழிவு காணப்படுமென்பதுடன், இதன் காரணமாகப் போக்குவரத்து நெருக்கடி மற்றும் விபத்துகள் சம்பவிக்கக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும், அந்நிலையம் எச்சரித்துள்ளது.

எனவே, பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் நடக்குமாறும், அந்நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், பிரான்ஸில் நேற்று காணப்பட்ட கடுமையான பனிப்பொழிவு காரணமாக, பிரான்ஸின் வடபகுதி மற்றும் பரிஸ் நகரம் குளிரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

அத்துடன், கடுமையான பனிப்பொழிவைத் தொடர்ந்து, பரிஸிலுள்ள ஈபெல் கோபுரத்தின் செயற்பாடுகளைத் தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பிரான்ஸிலுள்ள 32 அரசாங்கத் திணைக்களங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்படலாமெனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg