Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழர்களிடையே பிளவை ஏற்படுத்துவதற்கான சதியே இத்தேர்தல்: குணசீலன்

In இலங்கை
Updated: 06:11 GMT, Feb 7, 2018 | Published: 06:11 GMT, Feb 7, 2018 |
0 Comments
1223
This post was written by : Risha

தமிழர்களுடைய வாக்குகளை உடைத்து, பிளவுகளை ஏற்படுத்துவதற்கான சதியே இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் என வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் தெரிவித்துள்ளார்.

மாந்தை மேற்கு பிரதேச சபை, வெள்ளாங்குளம் வட்டாரத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் பெண் வேட்பாளரை ஆதரித்து நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற பிரசார கூட்டத்தின்போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின் மூலமான அபிவிருத்தி திட்டங்கள் குறித்து நாம் பேச வரவில்லை.

எங்களுடைய பிரதான நோக்கம் உள்ளூராட்சி சபைகளினுடைய அதிகாரத்தைக் கைப்பற்றுவதன் மூலமாக எங்களுடைய மக்களின் முழுத்தேவையையும், சுய கௌரவத்தையும், சுய நிர்ணயத்தையும் பெற்றுக் கொடுப்பதே.

எங்களிடம் இருக்கின்ற ஒற்றுமையின் பலம் உடைந்து துண்டு துண்டாக போகும் பட்சத்தில், இங்கு ஒரு பிரச்சினையுமே இல்லை, இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை, அவர்களுக்கு எந்த இழப்புக்களும் இல்லை என்று பேரினவாதிகள் பிரசாரத்தை தொடங்கி எங்களுடைய எதிர்கால சந்ததியினுடைய வாழ்க்கையை அழிக்க வாய்ப்புள்ளது. ஆகவே அனைவரும் கவனமாக சிந்தித்து செயல்பட வேண்டியது அவசியமாகும்” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg