Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

என்னால் எவருக்கும் பாதிப்பு வராது: சாணக்கியன்

In இலங்கை
Updated: 09:19 GMT, Feb 7, 2018 | Published: 09:19 GMT, Feb 7, 2018 |
0 Comments
1231
This post was written by : Anojkiyan

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தான் இணைந்து கொண்டதால் யாருக்கும் பாதிப்பு வராது என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் பதவியை இராஜினாமா செய்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து கொண்ட இரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

துறைநீலாவணை வட்டாரத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரை நேற்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்த வேளையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிடடார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“எனது பாட்டனார் தமிழ் மக்களுக்காக தனது உயிரைக்கூட துச்சமாக எண்ணி சேவை ஆற்றியமையால்தான் அவர் இறந்தாலும் மக்கள் மத்தியில் அவரது நாமம் இன்றும் உச்சரிக்கப்படுகிறது. எனது பாட்டனாரின் 100ஆவது ஜனன தினத்திற்காக அவுஸ்ரேலியாவில் இருந்து இங்கு வந்தேன், அப்போது எனக்கு 22 வயதாக இருந்தது. தற்போது 27 வயதாகின்றது. இன்றைய காலக்கட்டத்தில் நடைபெற இருக்கின்ற உள்ளூராட்சி தேர்தலின் முடிவுகள் தமிழ்மக்களின் அரசியலில் நல்லதோர் முடிவினை உலகிற்கு எடுத்துச்செல்லும் என்பதனை நாம் உணரவேண்டியதாக இருக்கின்றது.

இந்த காலகட்டத்தில் நாம் ஒவ்வொருவரும் உணர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும், அதனை உணர்ந்துதான் நான் இந்த முடிவை எடுத்தேன். இதனால் தமிழ் மக்கள் பெரும் மகிழ்ச்சியுடன் இருப்பதுடன் என்னை வரவேற்கின்றனர்.

அதன் பிற்பாடுதான் எனது பாட்டனாரின் ஞாபகார்த்தமாக உள்ள இராசமாணிக்கம் மண்டபத்தில் இணைந்துகொண்டேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்து தமிழ் மக்களுக்கு சேவை செய்ய இருக்கின்றேன். என்னுடைய பாட்டனார் செய்த பணிபோல் முழுமையாகச் செய்ய முடியாவிட்டாலும் ஒரு சில பணியினையாவது செய்யவேண்டியது காலத்தின் தேவையாகும்” என கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg