Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஹட்றிக் வெற்றியுடன் புதிய வரலாறு படைக்குமா இந்திய அணி?

In கிாிக்கட்
Updated: 06:52 GMT, Feb 7, 2018 | Published: 06:52 GMT, Feb 7, 2018 |
0 Comments
1318
This post was written by : Elakkiya

இந்தியா  மற்றும் தென் ஆபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று (புதன்கிழமை) நடைபெறவுள்ளது.

கேப்டவுனில் நடைபெறும் இந்த போட்டியில் வெற்றிபெறுவதன் மூலம் ஹட்றிக் வெற்றியை பதிவு செய்வதற்காக இந்திய அணி முயற்சிகளை மேற்கொள்ளும். அதேவேளை முதலிரு ஒருநாள் போட்டிகளிலும் தோல்வியடைந்த தென் ஆபிரிக்க அணி பதிலடி கொடுக்கும் முனைப்புடன் இன்றைய போட்டியில் களமிறங்கும்.

தென் ஆபிரிக்காவுக்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது ஆறு போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்ற நிலையில் டேர்பன் மற்றும் செஞ்சூரியனில் நடைபெற்ற முதலிரு ஒருநாள் போட்டிகளிலும் முறையே 6 விக்கெட்கள் மற்றும் 9 விக்கெட்களால் வெற்றிபெற்றது.

டெஸ்ட் தொடரை இழந்த பின்னர் ஒருநாள் தொடரில் எழுச்சி கண்டுள்ள இந்திய அணி முதலிரு போட்டிகளிலும் தென் ஆபிரிக்க அணிக்கு பலத்த நெருக்கடிகளை கொடுத்தது என்றே கூறலாம். அதேபோன்று இன்றைய போட்டியிலும் நெருக்கடிகளை கொடுத்து ஹட்றிக் வெற்றியை பதிவு செய்வதே இந்திய அணியின் நோக்கமாக உள்ளது.

இதற்கு முன்பாக தென் ஆபிரிக்க மண்ணில் நான்கு ஒருநாள் தொடர்களில் விளையாடியுள்ள இந்திய அணி எந்த தொடரிலும் 2 போட்டிகளுக்கு மேலாக வெற்றி பெற்றதில்லை. இதனை மாற்றி அமைத்து புதிய வரலாறு படைப்பதே கோஹ்லி தலைமையிலான இந்திய அணியின் நோக்கம்.

அதேவேளை நெருக்கடிகளில் தத்தளிக்கும் தென் ஆபிரிக்க அணி சரிவிலிருந்து மீள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மணிக்கட்டை பயன்படுத்தி சுழற்பந்து வீசும் 5 பந்து வீச்சாளர்களை வரவழைத்து நேற்றைய தினம் வலைப்பயிற்சியில் ஈடுபட்ட தென் ஆபிரிக்க அணியின் புதிய வியூகம் இன்று பலனளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg