Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்!

In இந்தியா
Updated: 09:25 GMT, Feb 7, 2018 | Published: 09:25 GMT, Feb 7, 2018 |
0 Comments
1217
This post was written by : Litharsan

திடக்கழிவு மேலாண்மை குறித்த புதிய விதிமுறைகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பான வழக்கில் மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றில் நீதிபதிகளான மதன் பி.லோகுர் மற்றும் தீபக் குப்தா ஆகியோர் முன்னிலையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது. இதன்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சட்டத்தரணி வாசிம் குவாத்ரி இது தொடர்பாக பிரமாண பத்திரம் ஒன்றை மத்திய அரசு தாக்கல் செய்ய விரும்புவதாக கூறினார்.

இதனால் அதிருப்தி அடைந்த நீதிபதிகள் அந்த பிரமாண பத்திரத்தை ஏற்றுக் கொள்ள மறுத்ததுடன் இது தொடர்பில் மத்திய அரசின் செயற்பாட்டு எங்களுக்குத் திருப்தி இல்லை. நீங்கள் தாக்கல் செய்யும் பிரமாணப்பத்திரத்தில் முக்கிய விடயம் எதுவும் இருக்காது என்று குறிப்பிட்டனர்.

மேலும் எல்லா குப்பைகளையும் எங்கள் பக்கம் தள்ளிவிடாதீர்கள். நாங்கள் குப்பை சேகரிப்பவர்கள் அல்ல எனத் தெரிவித்ததுடன், ஏற்கனவே உள்ள எளிய விதிமுறைகளை மாநிலங்கள் கடைபிடிக்காத நிலையில் இதுபோன்ற கடுமையான விதிமுறைகளை ஏன் வெளியிடுகிறீர்கள்?’ எனக் கேட்டனர்.

இந்த விசாரணை தொடர்பான விளக்கப்படம் ஒன்றை 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg