Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரிய மோதல்: யுத்தநிறுத்தத்துக்கு ஐ.நா. வலியுறுத்து

In உலகம்
Updated: 09:30 GMT, Feb 7, 2018 | Published: 09:30 GMT, Feb 7, 2018 |
0 Comments
1118
This post was written by : Suganthini

சிரியாவில் மோதல் உக்கிரமடைந்துள்ள நிலையில், உடனடியாக யுத்தநிறுத்தத்தை மேற்கொள்ளுமாறு, அந்நாட்டு அரசாங்கத்துக்கு, ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

சிரியாவின் டமஸ்கஸுக்கு அருகில் போராளிக் குழுவினருக்கு எதிரான படையினரின் முற்றுகை தீவிரமடைந்துள்ளன. போராளிக் குழுவினருக்கு எதிராக சிரியப் படையினர் மோதலை முன்னெடுத்துவரும் நிலையில், பொதுமக்கள் பாரிய நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர்.

மோதல் பகுதிகளில் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு உடனடியாக உதவியளிக்க வேண்டும். இந்த மக்களுக்கான உதவி நடவடிக்கைகளை முன்னெடுக்க குறைந்தபட்சம் ஒரு மாதம் தேவைப்படுகின்றது. எனவே, உடனடியாக யுத்தநிறுத்தத்தை மேற்கொள்ள வேண்டுமென்று தாம் வலியுறுத்துவதாக ஐ.நா. நேற்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்துள்ளது.

போராளிக் குழுவினர் நிலைகொண்டுள்ள சிரியாவின் கிழக்கு கௌட்டா ( Ghouta) பகுதியில் அண்மையில் இடம்பெற்ற விமானத் தாக்குதலில், 40க்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்துள்ளதைத் தொடர்ந்து, யுத்தநிறுத்தத்துக்கு ஐ.நா. வலியுறுத்தியுள்ளது.

இதேவேளை, சிரியாவின் மோதல் பகுதிகளில் குளோரின் கொண்ட குண்டுகள் பயன்படுத்தமை தொடர்பாகத் தமக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஆகவே, இது தொடர்பாக விசாரணை செய்ய வேண்டியுள்ளதாக, ஐ.நா.வின் யுத்தக்குற்ற நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

சிரியாவின் இட்லிப் மாகாணத்தின் சரகிவ் (Saraqeb) நகரிலும், கிழக்குக் கௌட்டா நகரிலும் கடந்த 30 நாட்களாக நடத்தப்பட்ட 6 தாக்குதல்களின்போது, நச்சு ரசாயனக் குண்டுகளை அரசாங்கப் படையினர் பயன்படுத்தியமைக்கான தகவல் வெளிவந்துள்ளது. இருப்பினும், இதனை சிரிய அரசாங்கம் மறுத்துள்ளது.

இந்நிலையில், அவசர விசாரணை செய்ய ஐ.நா.வின் சர்வதேச ஆணையகத்தின் தலைமையகம் அழைப்பு விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg