Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கார் விபத்தில் பிரதமர் மோடியின் மனைவி காயம்!

In இந்தியா
Updated: 09:49 GMT, Feb 7, 2018 | Published: 09:49 GMT, Feb 7, 2018 |
0 Comments
1307
This post was written by : Litharsan

சிட்டிகாரில் இடம்பெற்ற கார் விபத்தில் பிரதமர் மோடியின் மனைவி காயமடைந்துள்ளதுடன், அவரது உறவினர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலம் சிட்டிகார் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் பிரதமரின் மனைவியான ஜசோதாபென் காயமடைந்ததுடன், அவரது உறவினரான வசந்தபாய் மோடி உயிரிழந்துள்ளார்.

பாரன் மாவட்டத்தில் நடைபெற்ற உறவினர் ஒருவரின் திருமண வீட்டிற்குச் சென்று குஜராத்திற்குத் திரும்புகின்ற வேளையிலேயே இந்த விபத்து இடம்பெற்றது.

இவ்விபத்தில் காயமடைந்த ஜசோதாபென் சிட்டிகாரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

ஜசோதாபென் தனது சகோதரர் அசோக் மோடியுடன் மெக்ஷானா மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg