Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிரேஷ்ட அமைச்சர்களுடன் பிரதமர் தெரேசா மே சந்திப்பு

In
Updated: 09:50 GMT, Feb 7, 2018 | Published: 09:50 GMT, Feb 7, 2018 |
0 Comments
1129
This post was written by : Suganthini

பிரெக்சிற் தொடர்பாக, சிரேஷ்ட அமைச்சர்களுடன் பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே இன்று (புதன்கிழமை) கலந்துரையாடியுள்ளார்.

பிரெக்சிற் தொடர்பாக, பிரித்தானியாவின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டுமென்று, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான பேச்சாளர் மைக்கேல் பார்னியர், பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே மற்றும் பிரித்தானியாவின் பிரெக்சிற்றுக்குப் பொறுப்பான அமைச்சர் டேவிட் டேவிஸ் ஆகியோருடன் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கலந்துரையாடலின்போது கேட்டிருந்தார்.

இதனையடுத்து,  பிரெக்சிற் தொடர்பாக, சிரேஷ்ட அமைச்சர்களுடன் பிரதமர் தெரேசா மே கலந்துரையாடியுள்ளார்.

மேலும், பிரெக்சிற்றுக்குப் பின்னர் குழப்பம் ஏற்பட்டால், ஐரோப்பிய ஒன்றிய ஒற்றைச்சந்தையில் பிரித்தானியாவின் அணுகலை ஐரோப்பிய ஒன்றியம் கட்டுப்படுத்த விரும்புவதாக, அண்மையில் கசிந்த ஆவணமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg