Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

லண்டனில் தீ விபத்து: ஒருவர் உயிரிழப்பு

In
Updated: 10:03 GMT, Feb 7, 2018 | Published: 10:03 GMT, Feb 7, 2018 |
0 Comments
1257
This post was written by : Suganthini

மேற்கு லண்டனில் அமைந்துள்ள மாடிக் குடியிருப்பொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

4 மாடிகளைக் கொண்ட மேற்படி குடியிருப்பின் முதலாவது மாடியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு தீப்பிடித்துள்ளதுடன், இது இரண்டாவது மாடிக்கும் பரவ ஆரம்பித்துள்ளது.  இந்நிலையில், மேற்படி மாடிக் குடியிருப்பில் வசித்துவந்த 8 குடும்பங்களை பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

சுமார் 80 தீயணைப்புப் படை வீரர்களின் உதவியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரையில் தெரியவில்லையெனத் தெரிவித்துள்ள பொலிஸார், இது தொடர்பான விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg