Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காங்கிரஸ் என்ன விதைத்ததோ அதையே அறுவடை செய்கிறது – பிரதமர் காரசார பேச்சு!

In இந்தியா
Published: 10:29 GMT, Feb 7, 2018 |
0 Comments
1149
This post was written by : Litharsan
modi-us-visit-759

கடந்த காலங்களில் காங்கிரஸ் என்ன விதைத்ததோ அதையே தற்போது அறுவடை செய்கின்றது என மக்களவைக் கூட்டத்தொடரில் உரையாற்றுகையில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மக்களவையில் கூட்டத்தொடரில் ஜனாதிபதியின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் இரண்டு நாட்களாக இடம்பெற்றுவருகிறது.  இதற்கு பதிலளித்து பிரதமர் மோடி இன்று (புதன்கிழமை) உரையாற்றினார்.

அவர் பேசும்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குழப்பத்தில் ஈடுபட்டனர். இதனால் கோபமடைந்த பிரதமர் காரசாரமான பேச்சை முன்வைத்தார்.

இதன் போது அவர் கருத்துத் தெரிவிக்கையில், “எனது உரைக்கு எதிர்ப்பு தெரிவிப்பது வேதனையளிக்கிறது. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பிற நாடுகளின் அளவுக்கு இந்தியா வளர்ச்சி அடையவில்லை. கடந்த காலத்தில் காங்கிரஸ் என்ன விதைத்ததோ அதையே தற்போது அறுவடை செய்கிறது.

70 ஆண்டுகளுக்கு முன்பே தேர்தல் காரணங்களுக்காகவும், அற்ப ஆதாயத்திற்காகவும் காங்கிரஸ் கட்சி நாட்டைப் பிரித்தது. இதனால் 125 கோடி இந்தியர்கள் இன்றும் பாதிக்கப்படுகின்றனர்.

ஜனாதிபதி உரை எந்த கட்சிக்கும் சொந்தமானது அல்ல. 34 உறுப்பினர்கள் இந்த விவாதத்தில் பங்கேற்று பேசி உள்ளனர். எதிர்ப்பும் ஆதரவும் இருப்பது வழமை. எனினும் இந்த விவாதம் ஆக்கப்பூர்வமானதாக இருந்தது’ என்று கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)