Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேல்ஸில் பனிப்பொழிவு: சுமார் 20 பாடசாலைகள் இயங்கவில்லை

In
Updated: 10:16 GMT, Feb 7, 2018 | Published: 10:16 GMT, Feb 7, 2018 |
0 Comments
1177
This post was written by : Suganthini

வேல்ஸில் கடுமையான பனிப்பொழிவைத் தொடர்ந்து, 20க்கும் மேற்பட்ட பாடசாலைகள் இன்று (புதன்கிழமை) மூடப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேல்ஸின் சில பகுதிகளில் நேற்றிரவு பூராகவும் கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. இதனையடுத்து, பாடசாலைகளை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இதேவேளை, வேல்ஸின் பெரும்பாலான பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு காணப்படுமென்பதுடன், குளிரான காலநிலை நீடிக்குமென, பிரித்தானியாவின் வானிலை நிலையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன், பனிப்பொழிவு காரணமாக வீதிகளில் விபத்து சம்பவிக்கக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதால், அவதானமாக வாகனங்களைச் செலுத்துமாறும், வாகனச் சாரதிகளுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg