Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மனில் கூட்டணி அரசாங்கத்தை அமைக்க இணக்கம்!

In ஐரோப்பா
Published: 10:34 GMT, Feb 7, 2018 |
0 Comments
1042
This post was written by : Suganthini
ger

ஜேர்மனில் கூட்டணி அரசாங்கத்தை அமைக்கும் நோக்கில், மைய இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சி, அதிபர் அங்கேலா மெர்கலின் பழமைவாதக் கட்சியுடன் ஒப்பந்தத்தை எட்டியுள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ஜேர்மனில் மேற்படி 2 கட்சி உறுப்பினர்களுக்கிடையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, இந்த ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது.

ஜேர்மனியில் கடந்த 2017ஆம் ஆண்டு செப்டெம்பரில் நடைபெற்ற பொதுத்தேர்தலில், எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளாததால், அந்நாட்டில் புதிய அரசாங்கத்தை அமைப்பதில் குழப்பமான நிலைமை நீடித்தது. இந்நிலையில், அந்நாட்டில் சுமார் 4 மாதங்களாக அரசியல் முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)