Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வட்டி வீதத்தில் மாற்றமில்லையென ரிசேவ் வங்கி அறிவிப்பு

In இந்தியா
Updated: 11:29 GMT, Feb 7, 2018 | Published: 11:29 GMT, Feb 7, 2018 |
0 Comments
1165
This post was written by : Litharsan

நாட்டில் ஏற்பட்டுள்ள பணவீக்கத்தைக் கருத்தில் கொண்டு இம்முறையும் ரெப்போ வட்டி வீதத்தில் மாற்றம் எதனையும் கொண்டுவரப்போவதில்லை என மத்திய ரிசேவ் வங்கி அறிவித்துள்ளது.

மத்திய பட்ஜெட் தாக்கலுக்குப் பின்னர் ரிசேவ் வங்கியின் முதல் நாணயக் கொள்கைக் கூட்டம் ரிசேவ் வங்கியின் ஆளுநர் உர்ஜித் பட்டேல் தலைமையில் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதன்போது தற்போதைய சந்தை நிலைவரம் மற்றும் பணவீக்கம் உள்ளிட்ட காரணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

இதன்போது முப்பை பங்குச் சந்தையின் தொடர் சரிவு காரணமாக நாட்டின் பணவீக்கம் அதிகரித்துள்ளதைக் கருத்திற்கொண்டு ரெப்போ வட்டி வீதம்  6 சதவீதமாக தொடர்ந்தும் நீடிக்கும் என வங்கி அறிவித்தது.

இதன்மூலம் தொடர்ந்து மூன்று முறை ரெப்போ வட்டி வீதம் மாற்றம் செய்யப்படவில்லை என்பதுடன் கடந்த ஓகஸ்ட் மாதம் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு 6 சதவீதமாக மாற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg