Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியாவுக்கு எதிராக மீண்டும் பொருளாதாரத்தடை! – அமெரிக்கா அறிவிப்பு

In உலகம்
Updated: 11:43 GMT, Feb 7, 2018 | Published: 11:15 GMT, Feb 7, 2018 |
0 Comments
1207
This post was written by : Suganthini

வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுதத் திட்டம் காரணமாக, அந்நாட்டுக்கு எதிராக மீண்டும் பொருளாதாரத் தடையை விதிக்க அமெரிக்கா தயாராகி வருவதாக, அமெரிக்காவின் துணை ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

தென்கொரியாவில் எதிர்வரும் 9ஆம் திகதி ஆரம்பமாகும் ஒலிம்பிக் நிகழ்வில் கலந்துகொள்ளும் நோக்கில், அந்நாட்டுக்குப் பயணிப்பதற்கு முன்னராக, ஜப்பானுக்கு மைக் பென்ஸ் விஜயம் செய்துள்ளார். இதன்போது, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேயை மைக் பென்ஸ் டோக்கியோவில் இன்று (புதன்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதன் பின்னர், ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்தபோதே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்தபோது, ‘வடகொரியா தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் ஏவுகணை மற்றும் அணுவாயுதச் சோதனைகளைக் கைவிடும்வரை, அந்நாடு தனிமைப்படுத்தப்படுமென்பதுடன், அந்நாட்டுக்கு எதிராக மீண்டும் கடுமையான பொருளாதாரத் தடைகளை விதிக்க நாம் தயாராகி வருகின்றோம்.

அமெரிக்கா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் வடகொரியாவுக்கு எதிராக மீண்டும் பொருளாதாரத்தடை விதிக்க வலியுறுத்துகின்றன’ என்றார்.

எனவே, வடகொரியாவுக்கு எதிரான புதிய பொருளாதாரத்தடை விரைவில் அமுல்படுத்தப்படும்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg