Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நாட்டை பிளவு படுத்தும் நோக்கத்துடனேயே உள்ளார்கள்: கம்மன்பில

In இலங்கை
Updated: 11:27 GMT, Feb 7, 2018 | Published: 11:27 GMT, Feb 7, 2018 |
0 Comments
1225
This post was written by : Puvanes

தமிழ் சேசிய கூட்டமைப்பினர் இன்றும் நாட்டை பிளவு படுத்தும் கொள்கையுடனேயே இருக்கின்றார்கள் என்ற விடயம் மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது என மஹிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு கருத்து தெரிவிக்கையில்,

அண்மையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான விவாதத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு கலந்து கொள்ளவில்லை.

மத்திய வங்கி ஊழலின் பிரதான குற்றவாளியான அர்ஜுன் மகேந்திரன் மூலம் ராஜ் ராஜரத்தினம் விடுதலைப்புலிகளுக்கு உதவிகள் புரிந்து வந்ததாக பலவித குற்றச்சாட்டுகள் உண்டு என்பதை உலகமே அறியும்.

இவ்வாறாக தமது பிரிவினைவாத கொள்கைக்கு உதவி புரிந்த அர்ஜுன் மகேந்திரனுக்கு எதிராக செயற்பட விரும்பாத காரணத்தினாலேயே எதிர்க்கட்சி மத்திய வங்கி ஊழல் விவாதத்தை புறக்கணித்துள்ளார்கள் என நாம் கருதுகின்றோம்.

அதேபோன்று எதிர்வரும் தேர்தலில் மக்கள் சுயமாக சிந்தித்து செயற்பட வேண்டும். எதிர்வரும் நாட்களில் “மஹிந்த ராஜபக்ஷவிற்கு சிறை, கூட்டு எதிர்க்கட்சி பசில் – கோட்டா என இரு தரப்பாக பிளவு, கூட்டு எதிர்க்கட்சி நான்காக பிளவடைந்தது” என்ற பலவித தலைப்புச் செய்திகள் வெளிவரலாம்.

மக்களைக் குழப்புவதற்காகவும், வாக்குகளை உடைப்பதற்காகவும் இவ்வாறான செய்திகள் எதிர்வரும் 72 மணித்தியாலயங்களில் எப்போது வேண்டுமானாலும் வரலாம். எனினும் அவற்றின் உண்மைத்தன்மையினை ஆராய்ந்து மக்கள் தெளிவான முடிவுகளை எடுக்க வேண்டும் எனவும் உதய கம்மன்பில மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg