Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழர் விடுதலை கூட்டணியினருக்கு இடையூறு விளைவித்ததாக முறைப்பாடு!

In இலங்கை
Updated: 11:32 GMT, Feb 7, 2018 | Published: 11:32 GMT, Feb 7, 2018 |
0 Comments
1080
This post was written by : poovannan

தமிழர் விடுதலை கூட்டணியின் தேர்தல் பிரசார கூட்டத்திற்கு தமிழரசு கட்சியினால் இடையூறு விளைவிக்கப்பட்டுள்ளதாக நேற்று (செவ்வாய்கிழமை) முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து பிரதேச சபை வேட்பாளரான துரைசிங்கம் அன்றனி ஜெகநாதன் கூறுகையில், “முழங்காவில் பகுதியிலுள்ள விளையாட்டு மைதானம் ஒன்றில் எமது கட்சியினர் தேர்தல் பிரசார கூட்டம் ஒன்றை நடாத்துவதற்கு பூநகரி பிரதேச சபையில் இடத்துக்கான வாடகைப் பணம் செலுத்தி அனுமதி கோரியிருந்தனர். இதற்காக பூநகரி பிரதேச சபையால் அனுமதியும் முழங்காவில் பொலிஸாரால் ஒலிபெருக்கி அனுமதியும் வழங்கப்பட்டது.

குறித்த விளையாட்டு மைதானத்தில் பிரசார கூட்டம் இடம்பெறுவதற்கு தம்மிடம் அனுமதி பெறப்பட வேண்டும் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் ஆதரவாளர்கள் பிரதான வாயிலை பூட்டி இடையூறு விளைவித்துள்ளனர்.

இதே வேளை பொலிஸார் பூட்டினை உடைத்து பிரசார கூட்டத்திற்கு ஏற்பாடு செய்து தருவதாக கூறியுள்ள போதும் அவ்வாறு செய்தால் அதை வைத்து எமக்கெதிராக தமிழரசு கட்சியினர் பிரசாரம் செய்வார்கள் என்பதால் நாம் அதை மறுத்து கூட்டத்தை ரத்து செய்தோம்.

இவ்விடயம் தொடர்பில் கட்சியின் தலைமைகளுக்கும் தேர்தல்கள் செயலகத்திற்கும் முறைப்பாடு செய்துள்ளதுடன், முழங்காவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்தோம்.

சிறிதரனின் ஆதரவாளர்கள் இவ்வாறு நடந்து கொண்டமை தொடர்பாக நாம் எந்தவொரு நடவடிக்கைக்கும் தயாராக உள்ளோம்” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg