Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தல் முடிவுகள் சிலருக்கு அதிர்ச்சியைத் தரும் -வேட்பாளர் எம்.தேவதாசன்

In இலங்கை
Updated: 12:14 GMT, Feb 7, 2018 | Published: 12:13 GMT, Feb 7, 2018 |
0 Comments
1203
This post was written by : poovannan

சலுகைகளுக்காக கட்சி மாறியுள்ள சிலருக்கு எதிர்வரும் 10ஆம் திகதி மாலை வெளியாகும் தேர்தல் முடிவுகள் ஒரு அதிர்ச்சியைத் தரும் என உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பாகப் போட்டியிடும் எம்.தேவதாசன் தெரிவித்துள்ளார்.

களுதாவளை வடக்கு வட்டாரத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது இன்று (புதன்கிழமை) கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், “எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் களுதாவளைக் கிராம மக்கள் அனைவரும் அனைவரும் ஒன்றுதிரண்டு வீட்டுச் சின்னத்திற்கு வாக்கழித்து, தமிழ் தேசியத்திற்காகவும் களுதாவளைக் கிராம அபிவிருத்திக்காகவும் ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

இக்கிராமத்தில் நான் அனைத்து தொண்டர் சேவைகளையும் கடந்த காலத்திலிருந்த செய்து வருகின்றேன். எனது இச்சேவையை மேலும் திறம்படச் செய்வதற்கு இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தமிழ் தேசியக் கூட்டமைப்பினூடாக களம் அமைத்துத் தந்துள்ளது. மிக நீண்டகாலமாக தமிழர்களின் விடிவுக்காய்க் குரல் கொடுத்துக் கொண்டும் அபிவிருத்திகளைச் செய்து கொண்டும் வருவது தமிழ் தேசியக் கூட்டமைப்பாகும்.

எமது கிராம மக்கள் அனைவரும், வீட்டுச் சின்னத்திற்கு வாக்களிக்கத் தீர்மானித்துள்ள நிலையில், அற்ப சலுகைகளுக்காக மக்கள் மத்தியில் வேறு கட்சிகளுக்கு வாக்களிக்குமாறு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறானவர்களின் கருத்துக்களுக்கு மக்கள் செவிசாய்க்காமல் ஏனைய கட்சிகளைச் சார்ந்து நிற்கும் எமது உறவுகளும் இந்நிலையில் சற்றுச் சிந்தித்து நமது ஊரின் ஒற்றுமை, அபிவிருத்தி, அரசியல் இருப்பு உள்ளிட்ட அனைத்தையும் கருத்தில் கொண்டு தமிழ் தேசியத்தின் பால் ஒன்றிணையுமாறு வேண்டுகோள் விடுக்கின்றேன்” எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg