Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐரோப்பிய ஒன்றிய மத்திய வங்கிக்கு புதிய உப தலைவர்!

In
Updated: 12:19 GMT, Feb 7, 2018 | Published: 11:45 GMT, Feb 7, 2018 |
0 Comments
1035
This post was written by : Suganthini
europe

ஐரோப்பிய ஒன்றிய மத்திய வங்கிக்கு புதிய உப தலைவரைத் தெரிவுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய மத்திய வங்கியில் தற்போது உப தலைவராகப் பதவி வகித்துவரும் விட்டோர் கொன்ஸ்டன்சியோவின் ( Vitor Constancio) பதவிக்காலம் எதிர்வரும் மே மாதத்துடன் முடிவடைகின்றது. இந்நிலையில், மேற்படி வங்கிக்கு புதிய உப தலைவரைத் தெரிவுசெய்ய வேண்டியுள்ளது.

புதிய உப தலைவர் பதவிக்காக இருவரின் பெயர்கள் இதுவரையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. ஸ்பெய்ன் பொருளாதார அமைச்சர்  Luis de Guindos  மற்றும் அயர்லாந்து மத்திய வங்கியின் ஆளுநர்  Philip Lane ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

புதிய உப தலைவர் பதவிக்கான வேட்பாளர்களின் பட்டியல் எதிர்வரும் 20ஆம் திகதி வெளியிடப்படும். இந்நிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் புதிய தலைவரைத் தெரிவுசெய்வதற்கான வாக்களிப்பு நடைபெறவுள்ளதாகவும், அந்த ஊடகம் கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)