Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரசார மேடையில் பேசுவது போன்று நாடாளுமன்றில் மோடி பேசினார் – ராகுல் காந்தி தாக்கு!

In இந்தியா
Updated: 12:06 GMT, Feb 7, 2018 | Published: 12:06 GMT, Feb 7, 2018 |
0 Comments
1214
This post was written by : Litharsan

நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் பிரதமர் மோடி உரையாற்றிமை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பேசியது போல் இருந்தது என்றும், தான் பிரதமர் என்பதை மோடி மறந்துவிட்டார் என்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.

நாடாளுமன்றில் குடியரசுத் தலைவர் ஆற்றிய உரை மீதான விவதாம் இன்று (புதன்கிழமை) நடைபெற்றது. இதன்போது பிரதமர் உரையாற்றத் தொடங்கியதும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழப்பம் விளைவித்தனர். இதனால் கோபமடைந்த பிரதமர் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

இந்த உரை குறித்து பத்திரிகையாளர்களுக்குக் கருத்துத்தெரிவிக்கும் போதே ராகுல் காந்தி இவ்வாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவிக்கையில், “தான் இந்தியாவின் பிரதமர் என்பதை மோடி மறந்துவிட்டார். எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் காங்கிரஸ் கட்சியைக் குறை கூறியிருக்கிறார்.

நாட்டின் முக்கியமான விடயங்களான விவசாயம், ரஃபெல் ஒப்பந்தம், வேலைவாய்ப்பு மற்றும் நாட்டின் வளர்ச்சி பற்றி பேசுவார் என்று நினைத்தோம். ஆனால் அவர் அதுபற்றிப் பேசவில்லை.   பிரசார மேடைகளில் பேசுவது போல் நாடாளுமன்றில் உரையை முன்வைத்துள்ளார்” என்று கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg