Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சமூக அக்கறையற்ற தலைமைகளின் நீலிக் கண்ணீருக்கு ஏமாற வேண்டாம்: ரிஷாட்

In இலங்கை
Updated: 12:26 GMT, Feb 7, 2018 | Published: 12:26 GMT, Feb 7, 2018 |
0 Comments
1066
This post was written by : Risha
WhatsApp Image 2018-02-06 at 9.32.28 PM

வன்னி பிரதேசத்தை மீளக் கட்டியெழுப்புவதில் இதுவரை அக்கறை கொள்ளாத அரசியல் தலைமைகளின் நீலிக் கண்ணீருக்கு ஏமாற வேண்டாம் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில், ஐக்கிய தேசிய முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, மன்னார், பெரியமடுவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”வடக்கு முஸ்லிம்களுக்கு எந்த உதவியும் செய்யாத, செய்யவும் வக்கில்லாத அரசியல்வாதிகள் என்னை வீழ்த்துவதற்காக, எனது அரசியல் பலத்தை தகர்ப்பதற்காக, ஒவ்வொரு ஊரிலும் வேட்பாளர்களை நிறுத்தி, எமது கட்சிக்கான பிரதிநிதித்துவத்தை இல்லாமலாக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும், கேவலமான அரசியல் கலாசாரத்தை நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றோம்.

அகதி மக்களின் வாக்குகளின் மூலம், கடந்த காலங்களில் ஏமாற்றிப் பெற்ற அதிகாரங்களால் தமது சுகபோகத்தை தேடிக்கொண்டவர்கள். இப்போது மீண்டும் அதே அதிகாரத்தைப் பெறுவதற்காக பாடுபடுகின்றனர்.

பெரியமடு, கரடிக்குளி, மறிச்சுக்கட்டி, பாலைக்குழி போன்ற எமது பிரதேசங்களில், காடழித்து முஸ்லிம்கள் அடாத்தாகக் குடியேறுகின்றனர் என இனவாதிகள் கொக்கரித்த போது, பேசாது இருந்தவர்கள், அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்கள் இனவாதிகளிடம் எமது சமூகத்தையும், அவர்களின் பிரதிநிதிகளான என்னையும் காட்டிக்கொடுத்தவர்கள், இப்போது பசப்பு வார்த்தைகளைக் கூறி வாக்குகளை கறக்க முயல்கின்றார்கள்.

இவர்களின் முஸ்லிம்கள் தொடர்பான அரசியல் செயற்பாடுகள், ‘பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன்’ என்ற நிலையிலேயே இருந்து வருகின்றது எனத் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)