Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாலைதீவில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த ஐ.நா. வலியுறுத்து

In உலகம்
Updated: 12:17 GMT, Feb 7, 2018 | Published: 12:17 GMT, Feb 7, 2018 |
0 Comments
1058
This post was written by : Suganthini

மாலைதீவில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துமாறு, அந்நாட்டு அரசாங்கத்திடம், ஐ.நா.வின் செயலாளர் நாயகம் அந்தோனியோ குட்ரெஸ் வலியுறுத்தியுள்ளார்.

தற்போது மாலைதீவில் நிலவிவரும் பதற்றமான அரசியல் சூழ்நிலையைத் தொடர்ந்து, அவர் இந்த வலியுறுத்தலை  நேற்று (செவ்வாய்க்கிழமை) விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ‘தற்போது மாலைதீவில் நிலவிவரும் பதற்றமான நிலைமை தொடர்பாக நாம் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றோம்.

மாலைதீவு மக்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அந்நாட்டு அரசாங்கத்துக்கு உண்டு. ஆகையால், அந்நாட்டில் பிரகடனப்படுத்துள்ள அவசரகால நிலைமையை உடனடியாக அகற்றி, சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்துமாறு நாம் கேட்டுக்கொள்கின்றோம்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, மாலைதீவில் நிலவும் பதற்றமான சூழ்நிலை காரணமாக, அந்நாட்டுக்கு அநாவசியமாகப்பயணம் மேற்கொள்வதைத் தவிர்த்துக்கொள்ளுமாறு, தனது பிரஜைகளிடம், சிங்கப்பூர் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg