Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஒலிம்பிக்போட்டி: வடகொரிய ஜனாதிபதியின் சகோதரி பங்கேற்பு

In உலகம்
Updated: 12:31 GMT, Feb 7, 2018 | Published: 12:31 GMT, Feb 7, 2018 |
0 Comments
1058
This post was written by : Suganthini

குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப நிகழ்வில், வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் சகோதரி பங்கேற்கவுள்ளமைக்குத் தென்கொரியா வரவேற்புத் தெரிவித்துள்ளது.

தென்கொரியாவில் எதிர்வரும் 9ஆம் திகதி முதல் 25ஆம் திகதிவரை குளிர்கால ஒலிம்பிக் போட்டி ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகும் நிகழ்வில் வடகொரிய ஜனாதிபதி கிம் ஜொங் உன்னின் சகோதரி பங்கேற்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ஒலிம்பிக் போட்டியின் ஆரம்ப நிகழ்வில், வடகொரியாவும் தென்கொரியாவும் ஒரு கொடியின் கீழ் அணிவகுத்துச் செல்லவுள்ளதுடன், ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்கவுள்ளமை மூலம் இரு கொரியாக்களுக்கிடையிலும்  பிளவுபட்டுள்ள  உறவு வலுப்படுவதற்கு காரணமாக அமைந்துள்ளதாக, அரசியல் அவதானிகள் கூறியுள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg