Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காந்தி, விவேகானந்தர் விரும்பியது புதிய பாரதமே – பிரதமர் மோடி

In இந்தியா
Updated: 13:27 GMT, Feb 7, 2018 | Published: 13:27 GMT, Feb 7, 2018 |
0 Comments
1170
This post was written by : Litharsan

காந்தி மற்றும் விவேகானந்தர் விரும்பியது புதிய பாரதமே. ஆனால் காங்கிரஸ் விரும்புவது அவசர பாரதம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தின் மீது மக்களவையில் இன்று (புதன்கிழமை) உரையாற்றியதைத் தொடர்ந்து பிரதமர் மோடி மாநிலங்களவையில் பேசியிருந்தார்.

இதன்போது அவர் பேசுகையில், “மக்களவையில் எனது பேச்சைக் கேட்க யாரும் தயாராக இல்லை, எதிர்க்கட்சியினர் குழப்பத்தில் தான் ஈடுபட்டனர். மக்களின் நல்வாழ்வுக்காக இன்னும் நிறைய விடயங்களைச் செய்யவேண்டியுள்ளது. என்னையும் எங்கள் திட்டத்தையும் குறை கூறுவதாக நினைத்து காங்கிரஸ் நாட்டைத்தான் திட்டுகிறது. மக்களின் நலனுக்காக எதிர்கட்சிகளின் சிறந்த ஆலோசனைகளை ஏற்க நான் தயாராகவே உள்ளேன்.

இனிமேல் காங்கிரஸ் தேவை இல்லை என நான் கூறவில்லை, காந்தியே கூறியுள்ளார். காந்தி மற்றும் விவேகானந்தர் விரும்பியது புதிய பாரதம். ஆனால் காங்கிரஸ் விரும்புவது அவசர (எமர்ஜென்சி) பாரதமே. காந்தி விரும்பிய புதிய இந்தியாவை காங்கிரஸ் ஏன் எதிர்க்கிறது? எனத் தெரியவில்லை” என்று கூறினார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg