Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரமாண்டமான இராணுவ அணிவகுப்புக்கு தயாராகிறது வடகொரியா

In உலகம்
Updated: 04:15 GMT, Feb 8, 2018 | Published: 04:15 GMT, Feb 8, 2018 |
0 Comments
1198
This post was written by : Elakkiya

தென் கொரியாவில் இவ்வாண்டு நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஒருநாள் முன்னதாக வடகொரியா தனது இராணுவத்தின் 70 ஆவது ஆண்டு விழாவை விமர்சையாக கொண்டாடுவதற்கு தயாராகிவருகின்றது.

இராணுவ படைகள் உருவாக்கப்பட்ட தினத்தை நினைவுகூரும் வகையில் பியோங்யாங்கின் வருடாந்த இராணுவ அணிவகுப்பு வருடம் தோறும் இடம்பெறுவது வழமை என்ற வகையில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது.

இவ்வருடம் பெப்ரவரி 8 ஆம் திகதி நடைபெறும் என்று அந்நாட்டு அரசாங்கம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன்படி இம்முறை இராணுவ அணிவகுப்பில், தனது தொலைதூர ஏவுகணைகளை வடகொரியா காட்சிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இவ்வாறிருக்க குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில் வடகொரியா இவ்வாறு இராணுவ அணவகுப்பை பிரமாண்டமாக நடத்துவது ஏற்புடையதல்ல என சர்வதேச நாடுகள் பலவும் விசனம் தெரிவிக்கின்றன.குறிப்பாக ஒலிம்பிக் போட்டிகளில் கவனம் செலுத்துவதற்கு இராணுவ அணிவகுப்பு இடம்பெறாமல் இருப்பதே சிறந்தது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.

இவ்வாறிருக்க, 13,000 படைகளும், 200 உபகரணங்களும் பியோங்யாங் விமான நிலையத்தில் ஒத்திகைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தென் கொரிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg