Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வீதி பிளவடைந்ததில் எட்டுபேர் உயிரிழப்பு

In உலகம்
Updated: 04:33 GMT, Feb 8, 2018 | Published: 04:33 GMT, Feb 8, 2018 |
0 Comments
1158
This post was written by : Elakkiya

சீனாவின் தெற்கு குவாங்டாங் மாகாணத்தின் ஃபோஷன் நகர வீதி திடீரென பிளவடைந்ததில் குறைந்தது எட்டுபேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

ஃபோஷன் சுரங்கப்பாதை தடம்-2 கட்டுமானதளத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று (புதன்கிழமை) இரவு 8.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதன்போது மூவர் காணாமல் போயுள்ளதுடன் எட்டுபேர் உயிரிழந்துள்ளதாக நகர போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒன்பது பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

வீதி திடீரென பிளவடைந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் இடம்பெற்றுவதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg