Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தாய்வான் நிலநடுக்கம்- உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

In உலகம்
Updated: 05:10 GMT, Feb 8, 2018 | Published: 05:10 GMT, Feb 8, 2018 |
0 Comments
1227
This post was written by : Elakkiya

தாய்வானின் ஹூவாலியன் நகரில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கி 265 பேர் காயமடைந்துள்ளதுடன் மேலும் 62 பேரை காணவில்லை என்றும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் மூவர் சுற்றுலாப் பயணிகள் என்றும் அவர்களில் இருவர் மெய்ன்லான்ட் Yun Men Tusi Ti  கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து இன்று (வியாழக்கிழமை) கண்டெடுக்கப்பட்டதாகவும் மற்றுமொரு பெண் சுற்றுலாப் பயணி, கட்டட இடிபாடுகளுக்குள் இருந்து நேற்று மீட்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Yun Men Tusi Ti   கட்டடம் தொடர்ச்சியாக சரிவடைந்த நிலையில் நேற்றைய தினம் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டன.

கடந்த செவ்வாய்க்கிழமை 6.5 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஐந்து வருடங்களின் பின்னர் தாய்வானில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கமாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தில் கட்டடங்கள் மற்றும் வீதிகள் முற்றாக சேதமடைந்தன. குறிப்பாக  Yun Men Tusi Ti  கட்டடம், மார்ஷல் ஹோட்டல் மற்றும் இரண்டு குடியிருப்பு கட்டடங்கள் சரிவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg