Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஐ.எஸ்.எல்.: நோர்த் ஈஸ்ட் யூனைடெட் எப்.சி. அணியை வீழ்த்தியது புனே சிட்டி!

In உதைப்பந்தாட்டம்
Updated: 05:22 GMT, Feb 8, 2018 | Published: 05:22 GMT, Feb 8, 2018 |
0 Comments
1146
This post was written by : Anojkiyan

இந்தியன் சுப்பர் லீக் கால்பந்து தொடரின் 66வது லீக் போட்டியில், எப்.சி. புனே சிட்டி 1-0 என்ற கோல் கணக்கில் நோர்த் ஈஸ்ட் யூனைடெட் எப்.சி. அணியை வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் எப்.சி. புனே சிட்டி அணி 25 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியது. நோர்த் ஈஸ்ட் யூனைடெட் எப்.சி. அணி 11 புள்ளிகளுடன் தொடர்ந்து ஒன்பதாவது இடத்தில் நீடிக்கிறது.

நேற்று (புதன்கிழமை) கவுஹாத்தியில் நடைபெற்ற இவ்விறுவிறுப்பான போட்டியில், இரு அணிகளும் கோல் போட கடுமையாக மோதிக்கொண்டன.

இப்போட்டியின் முதல் பாதிநேர ஆட்டத்தில் இரு அணியினரும் கடுமையாக போராடியும் கோல் போட முடியவில்லை. தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவதி பாதிநேர ஆட்டத்தில் கோல் அடிக்க இரு அணியினரும் கடுமையாக முயற்சித்தனர்.

ஆனால் இந்த வாய்ப்பு 86வது நிமிடத்தில் புனே அணிக்கு கிட்டியது. அந்த அணியின் மார்செலோ பெரெய்ரா முதல் கோல் அடித்து அணியை முன்னிலை படுத்தினார். இதையடுத்து இரு அணிகள் முயற்சித்தும் கோல் அடிக்கமுடியவில்லை. இதனால் இறுதியில் எப்.சி. புனே சிட்டி அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg