Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெனிசுவேலாவில் ஜனாதிபதி தேர்தல் அறிவிப்பு வெளியாகியது!

In உலகம்
Updated: 06:13 GMT, Feb 8, 2018 | Published: 06:13 GMT, Feb 8, 2018 |
0 Comments
1120
This post was written by : Elakkiya

வெனிசுவேலாவில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெனிசுவேலா ஜனாதிபதியாக நிக்கோலஸ் மடுரோவை மீண்டும் தேர்வு செய்வதற்காக இடதுசாரி அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சி கூட்டணிகளுக்கு இடையில் நடத்தப்பட்ட  மத்தியஸ்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ள நிலையில் மேற்படி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

எண்ணெய் வளமுள்ள ஒரு தேசத்தில் மோசமான பொருளாதார நெருக்கடி மற்றும் செல்வாக்கற்ற தன்மை என ஜனாதிபதி நிக்கோலஸ் மடுரோ முகம்கொடுத்துள்ள விமர்சனங்களுக்கு மத்தியில், வெனிசுவேலாவின் ஆளும் சோசலிஸ்ட்கள் ஏப்ரல் மாதத்திற்கு முன்பாக தேர்தல் நடத்தப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் டொமினிக்கன் குடியரசில் அண்மையில் நடந்த பேசந்சுவார்த்தைகளின் போது, எதிர்கட்சியின் வேட்பாளரை தேர்வு செய்வதற்கு எதிர்வரும் ஜூன் மாதம் வரை கால அவகாசம் வழங்குமாறு எதிர்க்கட்சிகளின் கூட்டணி கேட்டுக் கொண்டது.

இதன்போது, சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சி ஆர்வலர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுடன் பசி மற்றும் நோயால் பாதிக்கப்பட்டுள்ள வெனிசுவேலா மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை வழங்குதல் உள்ளிட்ட பிரச்சினைகளில் அரசாங்கம் சிறிதளவேனும் விட்டுக்கொடுக்க முன்வரவில்லை என எதிர்தரப்பு தெரிவித்தது.

இதற்கிடையில், பேச்சுவார்த்தைகளை முறித்துக் கொள்ள வேண்டும் என்ற வொஷிங்டனின் உத்தரவை எதிர்க்கட்சிகள் ஏற்றுக் கொண்டுள்ளதாக அரசாங்கம் குற்றம்சாட்டியது.

இதனால் கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் இருதரப்பினருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியில் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg