Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேர்மனியின் கூட்டணி உடன்படிக்கை தொடர்பான எதிர்வினை கருத்துக்கள்

In ஐரோப்பா
Published: 07:31 GMT, Feb 8, 2018 |
0 Comments
1109
This post was written by : Elakkiya

ஜேர்மனியில் கூட்டணி அரசாங்கத்தை அமைக்கும் நோக்கில், மைய இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சி, அதிபர் அங்கேலா மெர்கலின் பழமைவாதக் கட்சியுடன் உடன்படிக்கையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மக்கள் மத்தியில் பல்வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றது.

சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பவேரிய கன்சர்வேற்றிவ் சமூக ஒன்றியம் ஒப்பந்தத்தில் சிறப்பாக பணியாற்றியுள்ள போதிலும் மெர்க்கலின் பழமைவாத ஜனநாயக ஒன்றியம் சில முக்கியமாக பணிகளிலிருந்து விலகியுள்ளதாக கொலோன் நகர மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதேவேளை அரசியல் ஆய்வாளர் உல்ரிச் வொன் அலெமான் இது தொடர்பாக தெரிவிக்கையில், சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் பவேரிய கன்சர்வேற்றிவ் சமூக ஒன்றியம் ஆகியன ஏராளமானவற்றை பெற்றுக் கொண்டாலும், பழமைவாத ஜனநாயக ஒன்றியம் மெர்க்கலின் பதவியை தக்கவைத்துக் கொள்வது போன்றே தோன்றுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறிருக்க கூட்டணி உடன்படிக்கையானது எதிர்மறையானது என ஜேர்மனியின் வர்த்தக சமூக பிரதிநிதிகள் தெரிவிக்கின்றனர். கூட்டணி உடன்படிக்கையில் எதிர்கால முதலீட்டுக்கு மிகக் குறைவான பணம் ஒதுக்கீடு செய்யப்படுவதாக தெரிவிக்கின்றனர்.

ஜேர்மனியில் கடந்த 2017ஆம் ஆண்டு செப்டெம்பரில் நடைபெற்ற பொதுத்தேர்தலில், எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ளாததால், அந்நாட்டில் புதிய அரசாங்கத்தை அமைப்பதில் குழப்பமான நிலைமை நீடித்தது. இந்நிலையில், அந்நாட்டில் சுமார் 4 மாதங்களாக அரசியல் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மைய இடதுசாரி சமூக ஜனநாயகக் கட்சி, அதிபர் அங்கேலா மெர்கலின் பழமைவாதக் கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு உடன்படிக்கை எட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)