Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அடுத்த ஆண்டில் மாணவர்களின் கல்வி மட்டம் உயர்வடையும்: செங்கோட்டையன்

In இந்தியா
Updated: 09:14 GMT, Feb 8, 2018 | Published: 07:57 GMT, Feb 8, 2018 |
0 Comments
1173
This post was written by : Kemasiya

மாணவர்களின் கல்வி மட்டத்தை அடுத்த ஆண்டில் மேலும் உயர்வடைய செய்வதற்கான முயற்சிகள் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பாடசாலைத்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவர்களுக்கான விபத்து காப்பீட்டு திட்டத்தை இன்று (வியாழக்கிழமை) தமிழகத்தில் ஆரம்பித்து வைத்த செங்கோட்டையன் மேற்படி தெரிவித்துள்ளார்.

இதன் போது மேலும் தெரிவித்த அவர், “தமிழக மாணவர்களின் கல்வி மட்டத்தை மேலும் உயர்வடைய செய்யும் வகையில் பாடசாலைமட்ட பாடத்திட்டத்தில்  இரண்டு ஆண்டுகளுக்குள் மாற்றம் செய்யப்படும்.

புதிய பாடத்திட்டத்தில் வேலை வாய்ப்பை கருத்தில் கொண்டும் சில பாடங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

அரசின் தற்போதைய கொள்கை மாற்றங்களின் அடிப்படையில் அடுத்த ஆண்டில் அரச பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அரசை பொறுத்தவரையில் வேகமாக தனது செயற்பாட்டை மேற்கொண்டு வருகிறது.  பாடசாலைகள் மட்டத்திலான இந்த பணிகளும் மிக வேகமாக செயற்படுத்தப்படும்” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg